Monday, February 8, 2010

சும்மா - 08/02/10

நான் பார்த்த/படித்த/ ரசித்த சம்பவங்களின் கலவையை சும்மா என்றொரு தலைப்பிட்டு வெளியிடுகிறேன்.

ரயிலா ஐயோ
------------------------
வெள்ளி இரவு, நானும் எனது உறவினரும் மதுரைக்கு கிளம்பினோம். நான் எழும்பூரில் இருந்து பாண்டிய விரைவு வண்டி(!!!) மூலமாக 9 .45 மணிக்கு கிளம்பினேன். சகோதரர் 9 மணிக்கு கே. பி. என். பேருந்தில் கிளம்பினார். மறுநாள் காலை 6 .45 மணிக்கு மதுரையில் இறங்கி சகோதரருக்கு தொலைபேசினேன். தூக்கத்தில் எடுத்த அவர், தான் 4 .45 மணிக்கு வீடு சென்று சேர்ந்ததாகவும் நல்ல உறக்கம் என்றும் கூறினார். இதுதான் இன்றைய நிலையாகிவிட்டது. நான்கு வழிச்சாலை பணிகள் நமது தனியார் பேருந்துகளுக்கு மிகவும் வசதி செய்து கொடுத்துவிட்டது. இப்போது ரயில் ஏறும்போது(குறிப்பாக சென்னையில் இருந்து) சற்று கடுப்பாகவே இருக்கிறது. முன்னரே டிக்கெட் போடும் வசதி, படுத்து செல்லும் வசதி(எனது முதுகு வலி காரணமாக), மற்றும் டிக்கெட் கட்டணம் இதுமட்டுமே இன்னும் ரயிலை நம்புவதற்கு காரணம். இதற்க்கு ஒரே தீர்வு, மதுரை சென்னை இரட்டை ரயில் பாதை தான். அதற்கெல்லாம் குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்போலவே தெரிகிறது.

கலாச்சாரம்
--------------------

நாக்பூரில் நடைபெறும் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி சற்று யோசிக்க வைத்தது. தென்னாப்பிரிக்க அணியில் உள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹாசிம் ஆம்லா என்கிற வீரரின் மனைவி பர்தா அணிந்து அமர்ந்திருந்தார். தென்னாப்பிரிக்க போன்ற கலாச்சாரம் கொண்ட நாட்டில் கூட ஒரு இஸ்லாமிய பெண் இப்படி தனது மதத்தின் கட்டமைப்பை கடைபிடிக்கும்போது, நமது பெண்கள் கலாசார முன்னேற்றம் என்று மதுரையிலும், திருச்சியிலும் ஜீன்ஸ் அணிந்து அலைகிறார்களே. என்ன கொடுமை சார் இது.பெண்கள் புடவை கட்டி வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. சுடிதார் என்ற ஒரு அருமையான ஆடை இருக்கிறது. அதனை அணியலாம். அதிலும் இப்போதைய பெண்கள், மிகவும் லேசான துணிகளில் ஆடை அணியும்பொழுது கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னுடைய மனைவியோ, சகோதரியோ அப்படி ஆடை அணிந்தால் நான் தடுக்க முற்படுவேன். அதுபோல் அவர்களது பெற்றோர் /சகோதரர் கேட்க மாட்டார்களா என்பது எனது ஆதங்கம் மட்டுமல்ல, எனது அலுவலக சகாக்கள் அனைவருமே இதே கருத்தில் தான் இருக்கிறார்கள்.

பாராட்டு விழா
-------------------------

தமிழ் திரையுலகம் சார்பில், முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் சில புகைப்படங்கள் பார்த்தேன். எப்போது இந்த விழாவை கலைஞர் தொலைகாட்சியில் பார்ப்பது என்று ஏக்கம். ஆம் அஜித், சூர்யா மற்றும் விஜய் மூவரும் ஒரே மேடையில். நயன்தாரா பிரபு தேவா நடனம். கமல் நாடகம் இன்னும் பலபல கலை நிகழ்ச்சிகள். இதற்கு நடுவில் சற்று அரசியல் சலசலப்பு வேறு.நிகழ்ச்சியை வாரநாட்களில் போடமால் வார இறுதிநாட்களில் போட்டால் நன்றாக இருக்கும்.








































ரோல் மாடல் தேவநாதன்
-------------------------------------------

காஞ்சி காம (!!!) குருக்கள் தேவனதனுக்கு சரியாக படம் எடுக்க தெரியவில்லை. அவரை விட நான் நன்றாக எடுக்கிறேன் என்று ஒரு தொழில்நுட்பக்கல்லூரி மாணவன், உடன் படிக்கும்மாணவியோடு நடத்திய காம விளையாட்டை, ஆதவன் திரைப்பட பாணியில் bubble gum வைத்து செல் போனை ஒட்டி வைத்து படம் பிடித்து வினயோகிதிருக்கிருக்கிறான். யார் யாரை எதற்காக ரோல் மாடலாக எடுப்பது என்பது மாணவர்களுக்கு புரியவில்லை போலும். (இந்த செய்தி சனி அன்று வெளியான ஜூனியர் விகடனில் வந்தது).

Monday, February 1, 2010

திரைப்பட விமர்சனம்

ஒரு திரைப்படம் தமக்கு புரிந்தால் மட்டுமே அந்த திரைப்படம் விமர்சனம் செய்யப்பட வேண்டும், அல்லது செய்ய முடியும் என்றே சொல்லலாம். தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய நாளிதழ், ஒரு நாளைக்கு லட்சணக்கணக்கில் மக்கள் பார்க்கும் அந்த இதழின் இணையத்தளம் இப்படி பல பெருமைகளை கொண்ட ஒரு இதழான தினமலரின் இணையத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்த விமர்சனம் படித்த எனக்கு சற்றே பெரிய அதிர்ச்சி. அந்த படத்தின் முக்கிய காட்சியே மாற்றி எழுதி விட்டார் அந்த விமர்சகர்.குறிப்பிட்ட அந்த தவறு இதோ

படத்தில் வருவது :

சோழர்கள் வாழ்ந்த இடங்களை தேடிப்போகும் ஆண்ட்ரியா, ரீமா மற்றும் கார்த்தி ஆகியோர் அந்த இடத்தை அடைந்தவுடன், கண்ட அதிர்ச்சி அந்த சோழர் வம்சத்து மக்களும், மன்னரும் வழி வழியாக அங்கே வாழ்ந்து வருவதுதான். அவர்கள் இப்போதும்உண்ண எதுவுமே கிடைக்காமல் நரமாமிசம் தின்று வாழ்வதுதானே படத்தின் கதை. நாம் பார்த்து புரிந்த கதையும் இதுதானே.

தினமலர் விமர்சனம் சொல்வது :

நிகழ் காலத்தில் ஆரம்பித்து இறந்த காலத்திற்கு போகும் ஆங்கில படங்களின் தற்போதைய பாணி கதை! ஆனால் அதில் எது இந்த காலம், எது அந்த காலம் என்பது உள்ளிட்ட எதுவுமே புரியாத அளவிற்கு தானும் குழம்பி, நம்மையும் குழப்பி இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

கதைப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நிகழ்ந்த கடும் போரில் தப்பி பிழைத்த சோழ இளவரசரைத் தேடி தீவுப் பகுதி ஒன்றிற்கு போகும் தொல்லியல் து‌றை போராசிரியர் பிரதாப் பேத்தனும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போக... அவரையும், அந்த இளவரசரின் கடந்த காலத்தையும் தேடி பயணிக்கிறது ரீமாசென் த‌லைமையிலான இந்திய தொல்பொருள்துறை! அந்த குழுவில் பாதுகாப்புப் படை அதிகாரியாக அழகம்பெருமாளும், காணாமல் போன பிரதாப் போத்தனின் மகளாக ஆண்ட்ரியாவும், அவர்களுக்கு சுமை தூக்கிச் செல்லும் கூலிப்படை தலைவனாக கார்த்தியும் இடம் பெற்றிருக்கின்றனர். எழு கடல், ஏழு மலை, எக்கச்சக்க சோதனைகள், இழப்புகளையெல்லாம் தாண்டி அந்த சோழ இளவரசன் தன் படை பரிவாரங்களுடன் வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்கும் இவர்கள், ஆச்சர்யம் ப்ளஸ் அதிசயமாக அவர் வாழ்ந்த கால கட்டத்தறி்குள்ளேயே பிரவேசிக்கின்றனர்.

இது முரணாக எனக்கு பட்டதாலேயே எனது பதிவில் போட்டுள்ளேன். அந்த விமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்.

தமிழ் படம் - ஒரு பார்வை

ஒட்டுமொத்தமாக ஒரு இரண்டரை மணி நேரத்துக்கு இடைவிடாமல் "லொள்ளு சபா" நிகழ்ச்சியை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த படமும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு படமாக எடுத்து உரித்து தொங்கவிடுவார்கள். இந்த படத்தில் சீனுக்கு ஒரு ஹீரோவாக எடுத்து தொங்க விடுகிறார்கள். இந்த படத்தில் நான் ரசித்தவை

சிவா - மனிதர் புகுந்து விளையாடுகிறார். ஆனால் இந்த மாதிரி படத்தில்தான் இவர் நடிக்கமுடியும் என்பதை அவரே நிரூபிக்கிறார். சீரியசாக முகத்தை வைத்துகொண்டு நடிப்பதே இந்த படத்துக்கு மிகப்பெரிய கஷ்டம். அதனை சரியாக செய்ததற்காகவே சிவாவுக்கு ஒரு சபாஷ். இவரின் வசன உரையாடல் வழக்கு நகைச்சுவை தானாக வரவழைக்கும். பரதநாட்டியம் ஆடுவது, ஹீரோ அறிமுக பாடல், அந்த குடும்ப பாடல் காட்சி இவை என்னை மிகவும் கவர்ந்தது.

நமது சென்னையில் பல வெளியூர் பையன்கள் தங்கியிருக்கும் வீட்டு அறைகளில் கேட்ட பல வசனங்கள் இந்த படத்தில் பல இடங்களில் கேட்க முடியும். உதாரணம் எங்கள் நண்பர்கள் குழு 2000 ஆம் ஆண்டு டிப்ளோமா படிக்கும்பொழுது உபயோகித்த, இப்பொழுதும் உபயோகிக்கின்ற ஒரு வசனம் "நீங்க எல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கல?". இயக்குனர் தனது நண்பர்களுடன் அமர்ந்து வசனம் எழுதி இருப்பார்போலும்.

என்னதான் நக்கல் படமாக இருந்தாலும், சில இடங்களில் அவற்றையும் தாண்டி பெரிய லெவெலில் நக்கல் அடிக்கிறார். உதாரணம், கள்ளிப்பால் இருக்கும் டப்பா. சுத்தமானது சுகாதாரமானது என்ற வசனம்.

ஹீரோவின் நண்பர்களாக இருக்கும் கதாபாத்திர தேர்வு அருமை. வெண்ணிற ஆடைமூர்த்தியின் இரட்டை அர்த்த வசனங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அதையும் அவரை வைத்தே கிண்டல் அடிப்பதும் அருமை. அவர் ஜாவா படிக்கும்பொழுது என்ன கொடுமை சரவணன் என்று குரல் கேட்டது திரைஅரங்கில்.

ஒஹ் மக சீயா பாடலில், லாலாக்கு டோல் டப்பிமா வரிகள் வரும்பொழுது ஹீரோ, ஹீரோயின் பீல் பண்ணுவது நல்ல கற்பனை.

இப்படி பல இருந்தும் எனக்கு ஒரே ஒரு வருத்தம். எனது அபிமான நடிகர் ரஜினியின் படங்களும் இதில் சிக்கியிருப்பதுதான். அதனால் இந்த படம் சூப்பர் என்று சொல்ல மனம் வரவில்லை. பரவாயில்லை, ஒரு முறை பார்க்கலாம் என்றே கூறுவேன். என்றாலும் புதிய முயற்சி என்று வாழ்த்துக்கள். தயாநிதிக்கு கண்டிப்பாக பைசா வசூல்.

சும்மா : படத்தில் இவர்களிடம் ஒரு சீனில் கூட வாரப்படாத ஒரே நடிகர் அஜித்குமார். அஜித் விடுபட்டமைக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். அவரின் 50 ஆவது படத்தை இதே தயாரிப்பாளர் தயரிக்கபோகிறார் என்பதால் இருக்கலாம். அல்லது இயக்குனர், தயாரிப்பாளர் யாராவது ஒருவர் அஜித் ரசிகராக இருக்கலாம். இரண்டுமே சாத்தியம் என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது. எங்களுக்காக எங்கள் தலைவரையும்(சூப்பர் ஸ்டார்) விட்டிருக்கலாமே அமுதன் சார்.

Thursday, January 28, 2010

ரெயின்போ ரீப்ளே(Rainbow Replay ) - பாக்யராஜ்

சென்னை ரெயின்போ பண்பலை ஒலிபரப்பில் வியாழன் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "ரெயின்போ ரீப்ளே". கடகடவென பேசும் ரேடியோ தொகுப்பாளர்கள், புதிய பாடல்கள் என்று வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல், பழைய ஹிட் திரைப்படங்களை எடுத்து, அவற்றின் வெற்றிக்கு காரணமான முக்கிய அம்சங்களை அலசும் அருமையான நிகழ்ச்சி. வாரம் ஒரு படமாக எடுத்து அலசும் இந்த நிகழ்ச்சியில், நடுவே அந்த படத்தின் பாடல் மற்றும் காட்சிகளை ஒலிபரப்புவார்கள்.

தற்பொழுது 50 வாரங்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒரு இயக்குனரை எடுத்து, அவரின் படங்களை பற்றிய கருத்துகளை பேசுவதுடன், அந்த இயக்குனரும் பேசுகிறார். வியாழனான இன்று அவர்கள் பேசிய படங்கள், திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் இயக்குனர் / நடிகர் பாக்யராஜ் அவர்களுடையது. நான் பேருந்தில் பயணப்பட்ட ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. பாக்யராஜ் அவரை பற்றி, அவர் ஹீரோ ஆனதைப்பற்றி நிறைய அறிய விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றில் சில

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் பொழுது, நடிகர் நடிகைகளுக்கு நான் தான் வசனம் சொல்லித்தருவேன். அப்பொழுதிருந்தே அவர் என்னை நடிகனாக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார். நான்தான் இயக்குனர் ஆகவே விருப்பம் என்றேன். புதிய வார்ப்புகள் திரைப்படத்திற்கு எல்லாமே தயாராகி, படபிடிப்புக்கு செல்லும் நாள் வரை நாயகன் கிடைக்கவில்லை. கடைசியில் பாரதிராஜா "நீ அப்புறமா இயக்குனர் ஆகலாம். இந்த படத்துக்கு நீ தான் ஹீரோ" என்று கூறினார். நானும் "சார், ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்த போட்டு சொந்தப்படம் எடுக்குறீங்க. எதுக்கு ரிஸ்க் எல்லாம். வேணாம் சார்" என்று கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அப்படிதான் நான் ஹீரோ ஆனேன். அதற்க்கு பிறகு, வில்லன் வேடம், நகைச்சுவை வேடம் என்று எல்லாம் போட்டு, கடைசியில் நானே ஹீரோ ஆக நடிக்க அனைவரும் வற்புறுத்தினார்கள்.

சின்ன வீடு என்று நான் படத்தின் தலைப்பு வைக்கும்பொழுது, பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. ஆனால் நான் தைரியமாக வைத்தேன். "நம்ம ஊர்ல நடக்காததா இது" என்று அவர்களுக்கு பதில் கூறினேன்.

அந்த எழு நாட்கள் கதை சொல்லும்போது அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அது சந்திரபாபு(எந்த சந்திரபாபு என்று அவர் பேட்டியில் குறிப்பிடவில்லை) வாழ்வில் நடந்தது என்று எனக்கு கூறினார்கள். அந்த பாதிப்பில் தான் நான் அந்த கதையை எடுத்தேன். "சந்திரபாபு திருமணம் செய்து வரும்பொழுது, அவர் மனைவி அவரிடம், நான் வேறு ஒருவரை விரும்பினேன். இப்படி என்னை கட்டாயப்படுத்தி உங்களுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அவர் தன்னிடம் இவ்வளவு செல்வம் இருந்தும், புகழ் இருந்தும் இந்த பெண் தன காதலனை நினைத்து அழுகிறாளே என்று எண்ணி அந்த பெண்ணை அவள் காதலனுடன் அனுப்பினார்." என்று என்னிடம் கூறினார்கள். இந்த முடிவை மக்கள் ஒத்துகொள்வார்கள் என்று நம்பியே நான் எடுத்தேன்.

சினிமா என்பது வெளியில் இருந்து பார்பவர்களுக்கு பொழுதுபோக்கு. ஆனால் எனக்கு அது சோறு போடும் தெய்வம். அதனால் சினிமாவில் நல்ல விஷயங்களை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்ட விசயங்களை சொல்லவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது உதவியாளர்களுக்கும் அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

Wednesday, January 27, 2010

பாலாவின் "அவன் இவன்" - ஜனனி ஐய்யர்

பாலா தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். அவன் இவன் என்கிற இந்த படம் அண்ணன் தம்பி கதை. விஷால்,ஆர்யா நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக ஜனனி இயர் நடிப்பார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. யார் இந்த ஜனனி இயர் என்று பார்பவர்களுக்காக படம் இணைத்துள்ளேன். இந்த அழகிய முகத்தை பல விளம்பரங்களில் பார்த்திருப்போம். அவர்தான் கதாநாயகி.

நகைச்சுவை கலந்த அதிரடி படமாக இந்த படம் இருக்கும் என்கிறார் பாலா. இன்னொரு சுவாரசியம் இளையராஜாவை விட்டு, மீண்டும் யுவனிடம் செல்கிறார் பாலா. ஏன் என்று கேட்கையில், இந்த படம் இளமை சம்பந்தமானது அதனால் யுவன் சரியாக இருப்பார் என்றே செல்கிறேன் என்றார். மேலும் அதிசயமாக இந்த படத்தை இரண்டு தவணையில், ஆறே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். நம்ப முடியவில்லையே. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் நம்பினால் சரி.





Monday, January 25, 2010

வாழ்த்துக்கள் பாலா


















2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குனர் தேசிய விருது பாலா அவர்களுக்கு நான் கடவுள் படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த படம் வெளிவந்தது 2009 இல் தான். ஆனால் அந்த படம் தணிக்கை செய்யப்பட்டது 2008 டிசம்பர் 31 இல் . ஆகவேதான் அதனை 2008 இல் சேர்த்திருக்கிறார்கள்.

இதற்க்கு முன் பிதாமகன் திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்குவர் பாலா என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்தேன். தற்பொழுது நான் கடவுள் எனது ஆசையை நிறைவேற்றி இருக்கிறது. இன்னும் நிறைய ப(பா)டங்கள் எடுங்கள் பாலா. ஒரே ஒரு வேண்டுகோள்.கொஞ்சம் வேகமா எடுங்கள். வாழ்த்துக்கள்.



இது எனது ஐம்பதாவது பதிவு. எனது பதிவுகளை பார்வையிடும் நண்பர்களுக்கு நன்றி ......

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பார்வை













இயக்குனர் செல்வராகவனின் மேல் எனக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. நல்ல இயக்குனர், நல்ல திரைக்கதை அமைப்பாளர் அவர். தமிழில் ஒரு புது முயற்சி செய்திருக்கிறார் என்பதாலும், இந்த படத்தின் முன்னோட்டம் பார்த்ததிலும், ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இந்த படத்தின் கதை பற்றி நான் பேசப்போவதில்லை எப்போதும் போல. என்னை கவர்ந்த மற்றும் கவராத விசயங்களை மட்டுமே பேசப்போகிறேன்.

இப்படி ஒரு புது முயற்சிக்கு தமிழில் அடித்தளம் அமைத்த செல்வாவின் முயற்சி மற்றும் அதில் இருந்த கடுமையான உழைப்பு என்னை பிரம்மிக்க வைக்கிறது. இவ்வளவு துணை நடிகர்கள், காடுகள் மலைகள் என்று அலைந்து ஒருங்கிணைத்து ஒரு படம் எடுப்பது தமிழுக்கு மிகப்பெரிய சாதனை. இதற்க்கு தனியாக செல்வாவிற்கு ஒரு சபாஷ். இவருக்கு ஒத்துழைத்த தயாரிப்பளருக்கும் ஒரு தமிழ் சினிமா ரசிகனாக நன்றிகள்.














செல்வா மட்டுமே தெரியும் அளவுக்கு ஒரு கனமான படத்தில், அவரையும் மீறி ஒருவர் தெரிகிறார் என்றால், அந்த ஒருவர் ரீமா மட்டுமே. பல ஏடுகளில், ரீமா ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகே படம் ஒத்துக்கொள்வதாக சொல்கிறார் என்றே படித்தேன். நல்ல முடிவு. இந்த படம் ரீமாவுக்கு ஒரு மைல்கல். இரு கைகளில் துப்பாக்கி எடுத்து சுடுவதும், கார்த்தியிடம் "நான் செம கட்டை இல்ல" என்று குசும்பாக கேட்பதும், அவ்வளவு பேரையும் காட்டுக்குள் கட்டி இழுத்து செல்லும் கம்பீரமும், ரீமா வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு திறமை நன்றாக வெளிப்பட செல்வா உதவியிருக்கிறார். இந்த படத்தில் ரீமாவுக்கு எதுவும் விருது கிடைக்காமல் போனால், அதற்க்கு ஒரே காரணம் அவரின் உதட்டு அசைவுக்காகத்தான்(லிப் சின்க்)இருக்கும். அவர் பார்த்திபனுடன் தூய தமிழில் உரையாடும்போது உதடு அசைவது பொருந்தவில்லை. இதையும் செல்வா சரி செய்திருக்க வேண்டாமா.

அடுத்து சிறப்பு கவனம் கலை இயக்குனர் சந்தானம் அவர்களுக்கு. பல காட்சிகளில் இவர் நம் கவனம் ஈர்க்கிறார். அந்த துவக்க கப்பல் காட்சி, மற்றும் இடிந்த சோழர் வாழ்ந்த பகுதி, பாம்புகள் சூழும் பகுதி இவையெல்லாம் அருமை.

கார்த்தியோ , ஆண்ட்ரியாவோ ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை என்பதே உண்மை. கார்த்தியின் நடிப்பில் பல இடங்களில் வீரன் எட்டி பார்க்கிறார். ஆண்ட்ரியா பல நேரங்களில் மெளனமாக இருந்தே காலம் கடத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி கடுமையாக உழைத்திருக்கிறார். பாலைவன காட்சிகளில் வண்ணம் சூரியக்கதிர்களை கண்முன் நிறுத்துகிறது. குண்டு போர்வீரன், இரும்பு குண்டை சுழற்றும்போது, அந்த குண்டு நமக்கு நேராக வரும்போது நான் என் தலையை நகர்த்தினேன். அந்த காட்சியின் கிராபிக்ஸ் அருமை. ஆனால் பல இடங்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் போதவில்லை. எடுத்துகாட்டு, ரீமாவும், கார்த்தியும் அடிக்கு ஒட்டகம், யானைகள் மற்றும் அந்த புதைகுழி ஆகிய காட்சிகள் மட்டமான கிராபிக்ஸ் ஆகவே தெரிகின்றன. இங்குதான் சங்கர் பாணியை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

ஜி.வி. பிரகாஷ் பின்னணியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக மூவரும் பாலைவனத்தில் நடக்கும்பொழுது வரும் பின்னணி இசை கொடுமையே. பாடல்கள் இந்த படத்திற்கு திணிப்பே. பாடல் இல்லாத படமாக வந்திருக்க வேண்டியபடம்.

என்னதான் செல்வாவை பாராட்டினாலும் அவர் திரைக்கதையில் எதோ குழப்பம் இருக்கிறது. இவ்வளவு நல்ல கற்பனையில், பிரம்மாண்டமான ஒரு படம் பார்த்தும் ஒரு ரசிகனாக எனக்கு முழு திருப்தி ஏற்பட வில்லை. (என் நண்பர்களுக்கும்) அதற்க்கு செல்வாவே காரணமாக இருக்க முடியும். இரண்டாவது பாதியை சுருக்கி, அவர்களின் பயண அனுபவங்களை இன்னும் சுவையாக்கிகதையை நகர்த்தி இருக்கலாமே என்று தோன்றுகிறது.

படம் முடிந்து வந்து நானும், என் நண்பர்களும் சிந்தித்த ஒரு விஷயம் "இந்த படம் இடைவேளைக்கு முன் ஒரு படமாகவும், இடைவேளைக்கு பின் ஒரு படமாகவும் எடுத்து தொடர்படமாக ஆக்கியிருக்கலாம். அந்தந்த பகுதிகளில் இன்னும் சுவாரசியமான காட்சிகள் சேர்த்து செய்திருந்தால், செல்வா எங்கேயோ போயிருப்பார்."

பார்த்திபனிடம் என்னவோ எதிர்பார்த்து சென்றேன். ஆனால் அவர் மிக சாதாரணமாக ஒரு கதாபத்திரத்தில் நடிப்பது போலத்தான் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் தனுஷ் நடிப்பதாக பேசப்பட்டது. "என்னை தவிர அந்த கதாபாத்திரத்தை யாரும் சிறப்பாக செய்ய முடியாது" என்று தனுஷ் ஒரு பெட்டியில் சொல்லியிருந்தார்.நிஜம்தானோ??

நமது சாதாரண தமிழ் படம் போல, ஒரு தரப்பை தவறாகவும், ஒரு தரப்பை சரியாகவும் காட்டி இருவரில் ஒருவர் வெற்றி பெறுவதுபோல் காட்டியிருந்தால் படத்தில் குறை இருந்திருக்காது. ஆனால் சோழர், பாண்டியரில் யார் தவறு செய்தார்கள் என்று ஒரு கோணம் இல்லாமல் போனது படத்தின் குறைகளுள் மிகப்பெரிய ஒன்று. ஒருவேளை யாரும் தவறாக நினைத்து தன்னை கேள்வி கேட்கக்கூடும் என்று செல்வா நினைத்திருப்பாரோ.இந்த படத்தில் எனது சிந்தனைப்படி மாற்றி எழுதி அதை ஒரு பதிவாக போடலாமே என்று ஒரு எண்ணம். நிறைவேறுமேபார்க்கலாம்.

கொசுறு: நேற்று ஞாயிறு இரவு காட்சிக்கு தான் கமலா அரங்கில் இந்த படம் பார்த்தேன். தாய் தின்ற மண்ணே பாடல் படத்தில் இல்லை. முன்னோட்டத்தில் பார்த்த "ராத்திரியானா கட்டி பிடிச்சுகிராலுக" என்ற வசனம் கூட வரவில்லை. இன்னும் எதெல்லாம் நாங்கள் கோட்டை விட்டோமோ. அந்த சிவனுக்கு தான் வெளிச்சம்.